பள்ளிக்கு செல்லும் ஜோதிகா- ஏன் இந்த முடிவு?
ஜோதிகா முன்னணி நடிகையாக இருந்த போதே சூர்யாவை திருமணம் செய்துக்கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கினார். பின் 8 வருடங்களுக்கு பிறகு 36 வயதினிலே படத்தில் நடித்தார்.
இந்த படமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது, இப்படத்திற்காக இவர் ஒரு சில விருதுகளையும் பெற்றார். இந்நிலையில் இவர் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படத்தை குற்றம்கடிதல் படத்தை இயக்கிய பிரம்மா இயக்கவுள்ளார், இப்படத்தின் கதாபாத்திரத்திற்காக ஒரு சில பயிற்சிகள் வேண்டுமாம்.
அதற்காக அது சம்மந்தமாக நடிப்பு பயிற்சிக்கு இன்றிலிருந்து 20 நாட்கள் ஜோதிகா செல்லவுள்ளாராம்.