பண்டாரவள நகரிலுள்ள கடைத் தொகுதியொன்று இன்று (08) அதிகாலை திடீரென தீப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பண்டாரவளை தீயணைப்பு பிரிவினர் மற்றும் மின்சார சபை ஊழியர்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லையெனவும் உயிராபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லையெனவும் பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.