பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
நீதிமன்ற தடையுத்தரவையும் மீறி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வெளிநாட்டவர்களுக்கு குத்தகைக்கு வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கூட்டு எதிர்க் கட்சியினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் பின்னர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஏழுபேரும் கடந்த 10 ஆம் திகதி கைது செய்யப்பட்டு இன்றுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே அனைவரையும் பிணையில் விடுதலை செய்ய மஜிஸ்ட்ரேட் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.