நாட்டில் தமிழ் மக்களை நசுக்கிவைக்க முற்பட்டால் அதற்கு அவர்கள் பதில் வழங்கும் நிலை ஏற்படும் எனவும், அடிப்படை வாதத்திற்குள் சென்று அவர்களது தேசியப் பிரச்சினையைத் தீர்க்க முயற்சிப்பதானது மேலும் மோசமான இனவாதத்தையே தோற்றுவிக்கும் என அமைச்சரவை இணை பேச்சாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்வதன் ஊடாகவே தேசியப் பிரச்சினையத் தீர்க்க முடியும். இதற்காக எடுக்கும் முயற்சிகளை அடிப்படைவாதிகள் யாராவது குழப்பினால் அதற்கான முழு பொறுப்பையும் அவர்களே ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.