நயன்தாராவின் மகளாக நடிக்கும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்
நயன்தாரா நடிக்கும் படம் இமைக்கா நொடிகள். கதைப்படி அவர் 4 வயது குழந்தையின் அம்மாவாகவும், போலீஸ் அதிகாரியாகவும் மாறுபட்ட வேடம் ஏற்றிருக்கிறார். நயன்தாராவின் குழந்தையாக நடிப்பது யார் என்று தெரியாமலிருந்தது. மானஸ்வி என்பவர் அவரது மகளாக நடிக்கிறார் என்ற விவரம் தெரிய வந்திருக்கிறது. இவர் காமெடி நடிகர் கொட்டாச்சியின் மகள்.
ஏற்கனவே உன்னோடு கா, வல்லவனுக்கு வல்லவன் போன்ற சில படங்களில் குழந்தை நட்சத்திரங்களுக்கு டப்பிங் குரல் கொடுத்திருப்பதுடன், சதுரங்க வேட்டை 2 உள்ளிட்ட சில படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடிக்கிறார். இமைக்கா நொடிகள் படத்தில் அதர்வா ஹீரோவாக நடிக்கிறார். அஜய் ஞானமுத்து இயக்குகிறார்.