எதிர்க் கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன் கூறுவது போன்று நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் ஒருபோதும் ஏற்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
உத்தேச அரசியலமைப்பினால் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கப் பெறப்படாது போனால், நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளதாக எதிர்க் கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன், இந்நாட்டுக்கு விஜயம் செய்துள்ள ஆசிய மற்றும் பசுபிக் வலய நாடுகளுக்கான இங்கிலாந்தின் அமைச்சர் மார்க் பீல்டிடம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே பிரதி அமைச்சர் அஜித் பி.பெரேரா இவ்வாறு மறுப்புத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் புதிய அரசியலமைப்பின் ஊடாக அனைத்து இனங்களும் ஏற்றுக் கொள்ளும் தீர்வொன்றையே முன்வைக்க விரும்புகின்றது எனவும் பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.