பேருவளை மாணிக்கக் கல் வர்த்தகருக்குச் சொந்தமான இரண்டு கோடியே 11 லட்சம் ரூபா பெறுமதியான மாணிக்கக் கல்லைத் திருடியவர் திருகோணமலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் புஜித ஜயசுந்தர தெரிவித்தார்.
குறித்த சந்தேகநபரை கல்கிஸ்ஸை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 20 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த மாணிக்கக் கல் கடந்த செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி திருடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.