நானும் ரௌடி தான் படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன், சூர்யாவை வைத்து இயக்கிவரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்திற்கும் அனிருத் தான் இசையமைத்து வருகிறார்.
சமீபத்தில் அனிருத்தின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தப்படத்தில் இடம்பெற்ற ‘சொடக்கு’ பாடலின் டீசர் வெளியிடப்பட்டது. இதில் சொடக்கு போட்டபடி சூர்யா உள்ளிட்ட குழுவினர் ஆடிப்பாடுவது போன்ற காட்சிகளின் ஊடாக, ஜிமிக்கி கம்மல்’ பாடல் புகழ் ஷெரிலும் நடனமாடி இருப்பது ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி உள்ளது.
கடந்த மாதம் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘வெளிப்பாடிண்டே’ புஸ்தகம் படத்தில் இடம்பெற்ற ஜிமிக்கி கம்மல் பாடல் உலக அளவில் ஹிட்டானது.. இந்தப்படம் வெளியானபோது இந்தப்பாடல் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் அப்போது ஓணம் சமயம் என்பதால் கேரளாவை சேர்ந்த ஷெரில் என்பவர் தான் நடத்திவரும் நடனக்குழு மூலம் ஓணம் கொண்டாட்ட பாடலாக மாற்றி, இதற்கு நடனமாடி அதை சோஷியல் மீடியாவில் வெளியிட, பாடலும் சூப்பர்ஹிட்டானது. ஷெரிலும் ஒரேநாளில் பாப்புலாரானார். அந்த புகழ் தான் தற்போது சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டத்திற்கு அவரையும் இழுத்து வந்துள்ளது.