வீட்டில் தனித்திருந்த மூதாட்டியைத் தாக்கிய திருடர்கள் அவரது கண்களைக் கட்டிவிட்டு அணிந்திருந்த மோதிரங்கள், வீட்டிலிருந்த பெறுமதியான பொருள்களைக் கொள்ளையிட்டுச் சென்றனர் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் நேற்று அதிகாலை நாவற்குழி, கேரதீவில் நடந்துள்ளது.அதிகாலை 3.30 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
தாக்குதலுக்குள்ளான விஜயச்சந்திரன் பத்மலோஜினி (வயது-62) சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கணவனை இழந்த இவர் வெளிநாட்டில் உள்ள சகோதரர் ஒருவரின் உதவியுடனே வாழ்ந்து வந்தார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.