டுவிட்டரின் அதிரடி நடவடிக்கை: அதிருப்தியில் பணியாளர்கள்!
அண்மைக் காலமாக பல முன்னணி இணையத்தள நிறுவனங்களும் தமது பணியாளர்களின் எண்ணிக்கையை அதிரடியாக குறைத்து வருகின்றன.
குறித்த நிறுவனங்களின் வீழ்ச்சி, மீள் கட்டுமானம் போன்ற பல்வேறு காரணங்களினால் இப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிறுவனங்களின் வரிசையில் தற்போது டுவிட்டர் தளமும் இணைந்துள்ளது.
முன்னணி சமூக வலைத்தளங்களுள் ஒன்றாகத் திகழும் டுவிட்டர் ஆனது தனது பணியாளர்களில் 8 சதவீதமானவர்களை இடைநிறுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி ஏறத்தாழ 300 வரையான பணியாளர்கள் வேலைவாய்ப்பினை இழக்கவுள்ளனர்.
இதற்கு பிரதான காரணமாக வளர்ச்சி வீதத்தில் பாரிய சரிவு ஏற்பட்டு வருகின்றமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், டுவிட்டரை விற்பனை செய்வதற்கு முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதுவரை உரிய கொள்வனவாளர் ஒருவர் கிடைக்கவில்லை எனவும் மற்றுமொரு தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.