பிரித்தானிய இளவரசி பயன்படுத்திய பல்வேறு வசதிகளுடன் தயார் செய்யப்பட்டு பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட சொகுசு ரோல்ஸ் ராய்ஸ் கார் ஏலத்தில் நேற்று விடப்பட்டது. இளவரசி டயானா கடந்த 1985 ஆம் ஆண்டு முதல் முறையாக தனது கணவர் சார்லஸுடன் அமெரிக்காவுக்கு விலையுயர்ந்த காரின் முழு பகுதியும் குண்டுதுளைக்காத வகையில் அமைக்கப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் காரில் சென்றார்.
காரின் வெளிப்பக்கத்தில் இண்டர்காம் வசதி செய்யப்பட்டுள்ளதால் கதவை திறக்காமலேயே வெளியில் இருக்கும் மக்களிடம் உள்ளிருப்பவர் பேச முடியும்.
நச்சு வாயுக்கள் கார் உள்ளே நுழையாத படி சிறப்பு வசதியும் செய்யப்பட்டுள்ளது.
காரானது வெறும் 50,000 மைல்கள் மட்டுமே இதுவரை இயக்கப்பட்டுள்ளது. டயானா பயன்படுத்தியது என்ற பெருமையுடன் குறித்த காரானது நேற்று ஏலத்தில் விடப்பட்டுள்ளது.