சைட்டம் பிரச்சினைக்கு இன்னும் இறுதித் தீர்மானம் ஒன்றுக்கு வரவில்லை எனவும் பல்வேறு விடயங்களை முதன்மைப்படுத்தி கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இவ்வாற இறுதிக்குள் தீர்மானம் ஒன்றுக்கு வரவுள்ளதாகவும் உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
சைட்டம் பிரச்சினையை ஆரம்பித்து மருத்துவ பீட மாணவர்களின் கல்வியை குழப்பியது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர்கள் தான். கொழும்பு பல்கலைக்கழகத்தில் 40, 50 மருத்துவ பீட மாணவர்கள் விரிவுரைக்கு வருகை தந்தபோது அவர்களை, விரிவுரை நடைபெற மாட்டாது எனத் திருப்பியனுப்பியவர்கள் மருத்துவர்கள் தான். தற்பொழுது பிரச்சினையை எம்மீது போடுகின்றனர் எனவும் அமைச்சர் ஜி.எம்.ஓ. உறுப்பினர்களை சாடினார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்னும் ஓரிரு தினங்களில் சைட்டம் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.