சீன அதிபராக பதவி வகிப்பவர், ஜின்பிங். சீனத் தலைவர்களில் மிகவும் கடுமையானவர் என்ற பெயரும் பெற்றவர். அதனால் அவருக்கு எதிராக கட்சியினர் புரட்சியில் ஈடுபடும் வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில் அண்மையில் தன்னை பதவியில் இருந்து கவிழ்ப்பதற்கான புரட்சியை அதிபர் ஜின்பிங் முறியடித்ததாக சீனாவில் இருந்து வெளிவரும் ‘சவுத் சீனா மார்னிங் போஸ்ட்‘ என்ற பத்திரிகை தகவல் வெளியிட்டு உள்ளது.
கடந்த வியாழக்கிழமை சீன கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய மாநாடு பீஜிங் நகரில் நடந்தது. இந்த கூட்டத்தில் பேசிய சீன பாதுகாப்பு ஒழுங்காற்று குழுவின் தலைவர் லியூ ஷியூ, “அதிபர் ஜின்பிங்கை புரட்சி மூலம் கவிழ்த்து விட்டு ஆட்சியை கைப்பற்ற சிலர் திட்டம் தீட்டினர். அவர்கள் கட்சியின் முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள். ஆனால் பெரும் ஊழல்வாதிகள். ஆனால் அவர்களின் திட்டத்தை ஜின்பிங் வெற்றிகரமாக முறியடித்து விட்டார் என்று அவர் குறிப்பிட்டதாக“ அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டு உள்ளது.