சீனாவின் சக்தி வாய்ந்த தலைவராக அந்நாட்டின் பிரதமர் ஜி ஜின்பிங் உருவாகியுள்ளார் என்று அந்நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜி ஜின்பிங்கின் சித்தாந்தங்களை அரசியலைமைப்பில் சட்டத்தில் சேர்ப்பதற்கான ஆதரவைப் பெறுவதற்கான வாக்கெடுப்பை சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியுள்ளது. இதன் மூலம் மாவோவுக்கு அடுத்து சீனாவின் அரசியலைப்பு சட்டத்தில் ஜி ஜின்பிங்கின் சித்தாந்தங்கள் சேர்க்கப்படவுள்ளன. இதனையடுத்து ஜி ஜின்பிங்கை மாவோக்கு நிகரான சக்தி படைத்தவராக ஜி ஜின்பிங் பார்க்கப்படுகிறார்.
சீன வீதிகளில் காணப்படும் ஜி ஜின்பின், மாவோ படங்கள்
சமீபத்தில் சீனாவில் நடைபெற்ற சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் பேசிய ஜி ஜின்பிங்கின் உரையும் உலகளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்ததுள்ளது.
சோசியலிசம் புதிய சகாப்தத்துக்கான சீன பண்புகள் என்ற தலைப்பில் தனது சிந்தாந்தத்தை அறிமுகப்படுத்தினார்.
அம்மாநாட்டில் ஜி ஜின்பிங் பேசும்போது, “நமது கட்சி உறுதியான, துடிப்பான தலைமையைக் கொண்டுள்ளது. நமது சோசியலிச அமைப்பு வலிமையும், சக்தியையும் வெளிப்படுத்துகிறது.
1.3 பில்லியன் சீன மக்கள் கவுரவத்துடன் வாழ்கின்றனர். எங்களது சீன பாரம்பரியம் நீடித்த பிரகாசம் கொண்டு ஜொலிக்கிறது” என்றார்.
சீனாவில் ஜி ஜின்பிங்கின் இந்த அதீத வளர்ச்சி பெற ஊழலுக்கு எதிரான அதிரடி நடவடிக்கை, செய்தி ஊடகங்கள் மீது முழு ஆதிக்கம், ராணுவ மறு சீரமைப்பு என்ற மூன்று உத்திகளை அவர் கையாள்வதாக அந்நாட்டு அறிஞர்கள் கூறுகின்றனர்.
ஜி ஜின்பிங் கடந்த 2012-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததது முதல் அந்நாட்டின் பொருளாதாரம் சீராக வளர்ச்சி அடைந்து வருகிறது.
மக்களால் நேர்மையானவர் என்று கொண்டாடப்படும் ஜி ஜின்பிங் மீது அவர் ஒரு சர்வாதிகாரி போல் செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டும் கூறப்படுகிறது.
இவரது ஆட்சிக் காலத்தில் வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் மீதான கைது நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக பரவலான கருத்து நிலவுவது குறிப்பிடத்தக்கது.