முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் கைது என்பது தவிர்க்க முடியாததென கொழும்பு ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.
கோத்தபாய ராஜபக்ஷவை கைது செய்து அவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்துவது தொடர்பில் அரசாங்க தரப்பு சட்டத்தரணிகள் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களுடனும் கடந்த வாரம் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது.
கடந்த வாரம் அமெரிக்கா விஜயத்தை முடித்து கொண்டு நாடு திரும்பிய கோத்தபாயவை விமான நிலையத்தில் வைத்து கைது செய்வதற்கு ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இருப்பினும், சில அதிகாரிகளின் ஆலோசனைக்கமைய இந்த நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.
மிக் விமானம் ஒப்பந்தம் தொடர்பாக தற்போது நடைபெற்று வரும் விசாரணைகளுக்கமைய கோத்தபாய கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தான் விரைவில் கைது செய்யப்படுவதை கோத்தபாய உறுதி செய்துள்ளதாக குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.