அஹமதியா முஸ்லிம் சமூகத்தினரின் 37ஆவது வருடாந்த மாநாடு, கனடாவின் சஸ்காச்சுவான் மாகாணத்தின் மிகப்பெரிய நகரான சஸ்கடூனில் இவ்வார இறுதியில் நடைபெற்றது.
குறித்த மாநாட்டில் மேற்கு கனடா முழுவதிலுமிருந்து 3 ஆயிரம் பங்கேற்பாளர்கள் கலந்துக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஹமதியா முஸ்லிம் சமூகத்தினரின் முக்கிய கடமைகளையும், நினைவுபடுத்தும் மற்றும் புதுப்பிக்கும் வகையில் இவ் இரண்டு நாள் அமர்வு இடம்பெற்றதாக ஏற்பாட்டுக் குழுவினர் குறிப்பிட்டனர்.
அஹமதியா சமூகம் என்பது இஸ்லாத்தின் குடையின் கீழுள்ள ஒரு பிரிவாகும். சஸ்கடூனில் அஹமதியா சமூகத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பத்தினர் காணப்படுகின்றனர்.
அஹமதியா சமூகத்தினருக்கு இடையிலான நெருக்கத்தை அதிகப்படுத்தவும், வெவ்வேறு நகரங்களில் வாழும் அனைத்து மக்களையும் ஒரே நேரத்தில் சந்திக்க வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதுவுமே இம்மாநாட்டின் நோக்கமாகும்.