சவூதி அரேபியாவில் பொய்க் குற்றச்சாட்டில் சிறைவாசம் அனுபவித்து வந்த இலங்கையருக்கு அமைச்சர் தலதா அத்துகொரளவின் தலையீட்டின் மூலம் நஷ்டஈடு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள் ளதாவது,
வெலிமட லந்தேகம பிரதேசத்தைச்சேர்ந்த முஹம்மத் ஹசீம் கடந்த 2011. 11. 27 ஆம் திகதி சவூதி அரேபியாவுக்கு வீட்டு சாரதி தொழிலுக்காக சென்றுள்ளார். அங்கு அவர் பணிபுரிந்த காலப்பகுதியில் 15 மாதங்களுக்கு அவருக்குரிய சம்பளப் பணம் வழங்கப்படவில்லை என அவரது உறவினர்களால் கடந்த 2015.05.09 ஆம் திகதி பணியகத்தில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டிருந்தது.
அத்துடன் அவர் பணிபுரிந்து வந்த வீட்டு எஜமான் அவர் மீது பொய்க் குற்றச்சாட்டு தெரிவித்து அவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்ததால், 3 மாதமும் 11 நாட்களும் அவர் சிறையிலடைக்கப்பட் டார்.
தொழில் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் பின்னர் குறித்த நபருக்கு வழங்கப்பட வேண்டிய 15 மாதங்களுக்குரிய சம்பளப் பணமான 18850 சவூதி ரியால் கிடைக்கப்பெற்றதும் அவர் மீண்டும் நாட்டுக்கு திரும்பி வந் தார்.
என்றாலும் முஹம்மத் ஹசீம் 3 மாதமும் 11 நாட்களும் பொய்க் குற்றச்சாட்டின் பேரில் சிறையிலடைக்கப்பட்ட தகவல் அமைச்சர் தலதா அத்துக்கொரளவுக்கு கிடைக்கப் பெற்றதும், அவர் சவூதி யிலுள்ள இலங்கை தூதரகத்துக்கு வழங்கிய ஆலோசனையின் அடிப்படையில், பொய்க் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட காரணத்தால் அவருக்கு ஏற்பட்ட பாதிப்புக்காக நஷ்டஈடு கோரி வழக்குத் தொடரப்பட்டது.
பாதிக்கப்பட்ட நபர் சவூதியில் இல்லாத நிலையில் அந்த நாட்டு நீதிமன்றம் வழக்கை விசாரணை செய்ததுடன் பொய்க் குற்றச்சாட்டின் பேரில் சிறையிலடைக்கப்பட்டதால் அவருக்கு ஏற்பட்ட பாதிப்புக்காக அவர் பணிபுரிந்த வீட்டு எஜமானுக்கு 19850 சவூதி ரியால் நஷ்டயீடாக வழங்குமாறு கடந்த 2017.08.21 ஆம் திகதி பணித்திருந்தது. அதனடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்ட நிதி அமைச்சரி னால் கடந்த செவ்வாய்க்கிழமை அவருக்கு வழங்கிவைக்கப்பட்டது.