கோத்ரா ரயில் நிலையம் அருகே “சபர்மதி ரயில்” எரிக்கப்பட்ட வழக்கில், தண்டணை விதிக்கப்பட்ட 11 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோத்ரா ரயில் நிலையம் அருகே, சபர்மதி ரயிலின் ஆறு பெட்டிகள் எரிக்கப்பட்டு உயிர்கள் காவுகொள்ளப்பட்ட வழக்கு, குஜராத் உயர் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த நிலையில், இன்று காலை (திங்கட்கிழமை) தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் பல குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாதமையினால், 11 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்படுவதாக கூறி, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி 7 ஆம் திகதி கோத்ரா ரயில் நிலையம் அருகே “சபர்மதி ரயில்” எரிப்பு சம்பவத்தில் 59 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.