கொக்கைன் கடத்தல்: குற்றத்தை ஒப்புக் கொண்டனர் இரண்டு துருக்கியர்கள்
சுமார் 512 மில்லியன் பவுண்கள் மதிப்புடைய கொக்கைன் போதை பொருளை கடத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட துருக்கியை சேர்ந்த இருவர், குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ள நிலையில் அவர்களுக்கு தண்டனை வழங்கப்படவுள்ளது. முமின் சஹின் (வயது 47) மற்றும் எமின் ஒஸ்மான் (வயது 50) ஆகியோரே குறித்த போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் ஆவர்.
MV Hamal எனும் கப்பலில் 3.2 தொன்கள் எடை கொண்ட கொக்கைன் போதைப்பொருளை, குறித்த இருவரும் அபர்டீன்ஷியர் எனும் பகுதியில் இருந்து சுமார் 100 மைல்கள் தொலைவில் கொண்டுசெல்லும் போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து கிளெஸ்கோ உயர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள், தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டமையை தொடர்ந்து, நீதிமன்றத்தினால் தண்டனை அறிவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
724 total views, 36 views today
– See more at: http://www.canadamirror.com/canada/65711.html#sthash.zY2TLV6h.dpuf