காணி இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட இராஜாங்க அமைச்சருமான டி.பி.ஏக்கநாயக்க தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினர், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில், நேற்று (10) அறிவித்தனர்.
2012ஆம் ஆண்டுக்கும் 2015ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், டி.பி.ஏக்கநாயக்க, கலை மற்றும் கலாசார அமைச்சராக இருந்தார்.
அதன்போது, மத்திய கலாசார நிதியத்தின் நிதியில், கெப் வாகனமொன்றைக் கொள்வனவு செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டு தொடர்பிலேயே, விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.