தொடர்ச்சியாக பெய்துவரும் மழையின் காரணமாக குக்கிலேகங்க நீர்த்தேக்கத்தின் வான் கதவு ஒன்று திறக்கப்பட்டுள்ளது.
இதனால், அகலவத்த, பாலிந்தநுவர, பதுரெலிய மற்றும் இங்கிரிய பிரதேசங்களில் தாழ்நிலப்பகுதியில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென்று ஜின்கங்கைக்கு பொறுப்பான நீர்ப்பாசனத்துறை பொறியியலாளர் அமரஜீவ லியனகே தெரிவித்தார்.
இதேவேளை காலி மாவட்டத்திலும் ஜின்கங்கையில் நீர்மட்டம் அதிகரிக்கக்கூடிய சூழநிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்யுமாயின் ஜின்கங்கையில் நீர் மட்டம் அதிகரிக்கக்கூடுமென்றும், காலி, ஜின்கங்கைக்கு பொறுப்பான நீர்ப்பாசனத்துறை பொறியியலாளர் அமரஜீவ லியனகே குறிப்பிட்டுள்ளார்.
ஜின்கங்கையின் நீர் மட்டம் வேகமாக அதிகரித்து வருகின்றது. இன்று காலை 9.45 அளவில் பத்தேகம நீர் அளவீட்டுக்கு அமைவாக நதியின் நீர்மட்டம் 3 தசம் 28 மீற்றரினால் அதிகரித்திருந்தது. அதேவேளை பத்தேகம, தொடங்கொட பிரதேசத்தில் நதியின் நீர் பெருக்கெடுத்துள்ளது.