“கிராம சக்தி” வேலைத்திட்டத்தை மக்கள் மயப்படுத்தும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று கொழும்பு சுகததாச அரங்கில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிலையான அபிவிருத்தியை இலக்காக கொண்டு 2030ம் ஆண்டளவில் வறுமையற்ற இலங்கையை கட்டியெழுப்பும் நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
2017ம் ஆண்டை வறுமை ஒழிப்பு ஆண்டாக பெயரிட்டுள்ளதுடன், வறுமையில் கோட்டில் வாழும் மக்கள் அதிகமாக வசிக்கும் மாவட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கி இந்த வேலைத் திட்டத்தை பரந்தளவில் முன்னெடுக்க உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது