கார்த்தி, விஷால் இணைந்து நடிக்கும் படத்தின் இயக்குனர் இவரா?
நடிகர் சங்க நலனுக்காக கார்த்தியும், விஷாலும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர். இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் நடந்து வருகிறது.
அது சரி, யார் இயக்குனர்? என்பது தான் பலரின் கேள்வி, நமக்கு கிடைத்த தகவலின்படி இவர்கள் இருவருக்கும் முத்தையா ஒரு கதையை கூறி அசத்திவிட்டாராம்.
ஏற்கனவே கொம்பன், மருது பழக்கத்தால் விஷாலும், கார்த்தியும் முத்தையா கதைக்கு சம்மதம் தெரிவித்துவிட்டார்கள் என கிசுகிசுக்கப்படுகின்றது.