ஏர் ஏசியா விமானத்தில் காற்றழுத்தம் குறைந்ததால் நடுவானில் பயணிகளுக்கு சுவாசப் பிரச்சனை ஏற்பட்டது. ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தோனேசியா புறப்பட்ட ஏர் ஏசியா விமானம், 32 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தில் காற்றழுத்தம் குறைந்துள்ளது. இதனால் உடனடியாக விமானம், 10 ஆயிரம் அடிக்கு கீழே இறங்கியதுடன், பெர்த் நகரில் மதியம் 12.40 மணிக்கு தரையிறக்கப்பட்டுள்ளது. விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் உயிருக்கு அஞ்சி, ஆக்சிஜன் மாஸ்குகளை அணிந்து கொண்டனர். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இதுபோன்று ஏற்பட்டுவிட்டதாக கூறிய ஏர் ஏசியா நிறுவனம், இதற்காக பயணிகளிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகக் கூறியுள்ளது.