கன்னட படத்தில் நடிக்க விருப்பமில்லை என்று ஸ்ருதிஹாசன் தெரிவித்ததையடுத்து, அவருக்கு எதிராக கன்னட சினிமா ரசிகர்கள் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கன்னட நடிகர் த்ருவா சர்ஜா நடிக்க உள்ள புதிய கன்னட படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடிக்க இருக்கிறார் என செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ஸ்ருதி ஹாசன் “ கன்னட படத்தில் நடிக்கும் திட்டம் எதுவும் எனக்கு இல்லை. மேலும், இது தொடர்பாக நான் யாரிடமும் பேசவும் இல்லை” எனக் கூறியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து பல கன்னட சினிமா ரசிகர்கள் அவருக்கு எதிராக கருத்து கூற தொடங்கிவிட்டனர்.
சர்ஜரி செய்த முகம் போல் உள்ள ஹீரோயின் எங்களுக்கு வேண்டாம் எனவும், உங்கள் தந்தை சினிமா வாழ்க்கையை எங்கு தொடங்கினார் என யோசித்து பாருங்கள் எனவும் ஒருவர் டிவிட் செய்துள்ளார்.
அதேபோல், “பெங்களூரில் ஏற்கனவே நிறைய பிளாஸ்டிக்குகள் இருக்கிறது.
எங்களுக்கு மேலும் வேண்டாம்” என ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், “எங்களுக்கு தேவையில்லை. கன்னட சினிமாவிற்கு நீங்கள் பொருத்தமான கதாநாயகி கிடையாது.
ஏராளமான திறமையான நடிகைகள் கன்னடத்தில் ஏற்கனவே இருக்கிறார்கள்” என ஒருவர் டிவிட் செய்துள்ளார்.
.