அரச சார்பற்ற அமைப்புக்களின் தேவைக்கு ஏற்றாற் போல் இந்நாட்டுக்கு புதிய அரசியலமைப்பை கொண்டு வரும் நடவடிக்கைக்கு இடமளிக்கக் கூடாது எனவும், அந்த சிந்தனையையும் நடவடிக்கையையும் விரட்டியடிக்கப்பட வேண்டும் எனவும் பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரர் அறிவித்துள்ளாார்.
இந்த அரசியலமைப்பு தொடர்பிலான தலைப்பு அரசியல் மேடைக்கு பேசுபொருளாக வருவதற்கு பிரதான காரணம் நாட்டிலுள்ள ஏனைய பிரச்சினைகளை மூடிமறைப்பதற்கேயாகும் எனவும் தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நாட்டில் புதிய அரசியலமைப்பொன்று எந்தக் காரணம் கொண்டும் நிறைவேற்ற இடமளிக்கக் கூடாது எனவும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.