2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் முதல் நிகழ்வை கிளிநொச்சியில் நடத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
ஜனாதிபதி நிதியிலிருந்து சிறந்த பெறுபேற்றை பெற்ற உயர்தர மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.
சபாநாயகர் தலைமையில் நிகழ்வு
இதன் தொடக்க விழா நாளை (22) கிளிநொச்சியில் சபாநாயகர் ஜெகத் விக்ரமரத்ன தலைமையில் நடைபெறும்.

இந்தத் திட்டத்தின் கீழ், 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்திய ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 60 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நிதி உதவித்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
வடக்கு மாகாண மாணவர்கள் கௌரவிப்பு
மாகாண ரீதியாக செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் முதல் நிகழ்ச்சி நாளை கிளிநொச்சியில் நடைபெறும், மேலும் 2023 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சிறந்து விளங்கிய யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்த சிறந்த மாணவர்கள் அங்கு கௌரவிக்கப்படுவார்கள்.

எதிர்காலத்தில் ஏனைய மாவட்டங்களிலும் இதேபோன்ற சிறந்த பெறுபேற்றை எடுத்த மாணவர்களை கௌரவிக்க ஜனாதிபதி நிதியம் தயாராகி வருகிறது.