மிக விரைவில் இலத்திரனியல் வாக்களிப்பு முறைமை அறிமுகம் செய்யப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினத்தை முன்னிட்டு ரத்மலானையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இலத்திரனியல் வாக்களிப்பு முறைமையை அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கைககள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இதன்மூலம் விசேட தேவைகளை உடையவர்கள் இலகுவாக வாக்களிப்பதற்கு முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.