இலங்கையின் வங்கி கட்டமைப்புக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையிலுள்ள வங்கிகளின் கணணி கட்டமைப்புக்குள் ஹெக்கர்கள் ஊடுருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக, சந்தேகிப்பதனால் வங்கி பாதுகாப்பு பிரிவுகள் ஆயத்தமாக உள்ளதென குறிப்பிடப்படுகின்றது.
கடந்த காலங்களில் வங்கி கணனி கட்டமைப்புகளின் பாதுகாப்பு தொடர்பில் வங்கி பிரதானிகளின் தலைமையில் மாநாடு நடைபெற்றது.
இதன்போது இலங்கை வங்கியின் கட்டமைப்பில் சைபர் தாக்குதல் மேற்கொள்ள முடியும் என நெறிமுறை ஹெக்கர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அரசாங்கம் மற்றும் தனியார் வங்கிகள் தங்கள் கணனி கட்டமைப்பிற்குள் வெளிநபர்கள் நுழைய முடியுமா என்பது தொடர்பில் ஆராய்வதற்கு தொடர்பில் நெறிமுறை ஹெக்கர்களின் உதவியை பெற்றுக் கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்கள் அந்த வங்கி கட்டமைப்பிற்கு உள்ள பாதுகாப்பு பலவீனத்தை சுட்டிக்காட்டியுள்ளனர். அதற்கமைய தற்போது பாதுகாப்பு அதிகம் வழங்கும் முறைகள் பின்பற்றப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனினும் இந்த முறை தொடர்பில் பாதுகாப்பு பிரிவு திருப்தி அடையவில்லை. நெறிமுறை ஹெக்கர்களினால் வங்கியின் பாதுகாப்பு கட்டமைப்பில் உள்ள பலவீனங்கள் கண்கானிக்கப்பட்டு அது தொடர்பில் தகவல் வழங்காமல் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட கூடும் எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.