உளமருத்துவர் திலினி ராஜபக்ஷ தனது அறிக்கையில் இலங்கை சனத்தொகையில் 100000 க்கு 14 அல்லது 15 பேர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றார்கள் என குறிப்பிட்டுள்ளார். 1997 ஆண்டில் தற்கொலை முயற்சியில் முதலாம் இடமாக இருந்தது, 100000 க்கு 47 பேர்கள் தற்கொலை செய்துள்ளார்கள்.
1995 ஆண்டில் தற்கொலை விடயத்தில் உலகத்தில் இரண்டாவது இடத்தினை பிடித்தது. ஆனால் 1940,1950,1960 ஆண்டுகளில் 5 அல்லது 10 பேர் மாத்திரமே தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள்.
தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றவர்கள் 30 வயதிற்கும் குறைந்தவர்கள் இவர்கள் 15-24 வயதிற்குற்பட்டவர்கள் என ஆய்வுகள் நிருபித்துள்ளன. தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதற்கு காரணமாக மனஅழுத்தம் மற்றும் உளகோளாரு காணப்படுகின்றன.
தங்களுக்கு ஏற்படும் தனிப்பட்ட பிரச்சினைகளின் போது அதனை ஈடுகொடுக்க முடியாமையே தற்கொலைக்கு காரணமாக அமைகின்றது. தற்காலத்தில் சமூக, பொருளாதார, கலாசார, மற்றும் ஏனைய குடும்ப விவகாரங்களினால் ஏற்படுகின்ற உளநெருக்கீடு காலப்போக்கில் மனஅழுத்தமாக மாறி தற்கொலைக்கு இட்டுச்செல்கின்றது.
ஏதாவது ஒரு விடயத்தினால் உளநெருக்கீடு ஏற்படுகின்ற போது அதற்கு தீர்வாக மதுபாவனை அல்லது போதை ஏற்படுத்தக்கூடிய பொருட்களை தமது வாழ்க்கைக்கு தீர்வாக எடுத்துக்கொள்வதனால் கடைசியில் உட,உளரீதியாக பாதிக்கப்பட்டு மனஅழுத்தத்திற்கு இட்டுச்சென்று தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றார்கள். தங்களுக்கு ஏற்படுகின்ற உளநெருக்கீட்டினை தனித்துக் கொள்வதற்கு உள ஆரோக்கியமான பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளல் வேண்டும்.
உதாரணமாக, ஆன்மீக, மற்றும் சமூகசார் பணிகளில் ஈடுபடுவதும் உளநெருக்கீட்டினை தனிக்க உதவும், என்பதை தற்கால இளைஞர்கள் உணர்ந்து கொண்டால் எம் உயிரின் பெருமதியை உணரந்து கொள்ள முடியும், எம்மால் செய்ய வேண்டிய கடமைகளை சரிவர நிறைவேற்ற முடியும்.