நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் நடைபெற்று வரும் நிலையில், அந்த அணிக்கு எதிராக நடைபெற உள்ள டி-20 கிரிக்கெட் போட்டியில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தினேஷ் கார்த்திக், ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, பும்ரா அணியில் இடம் பிடித்துள்ளனர். தோனி, ஷிகர் தவான், கே.எல்.ராகுல் , மனீஷ் பாண்டே, அக்சர் படேல், சாகல், குல்தீப் யாதவ், கோலி தலைமையிலான அணியில் புவனேஷ்வர் குமார் இடம்பிடித்துள்ளார். மேலும் ஸ்ரேயாஸ் அய்யர், முகமது சிராஜ் ஆகியோர் முதல்முறையாக டி 20 அணியில் இடம்பிடித்துள்ளனர். நியூசிலாந்து அணி உடனான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் முடிவடைந்த பின்னர் இந்தியஅணி இலங்கையுடனான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. பின் 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரிலும், 2 டி20 போட்டிகளும் நடைபெற உள்ளன. இதில், முதல் டி20 போட்டியில் மட்டும் ஆசிஷ் நெஹ்ரா விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. விராட் கோலி தலைமையிலான 16 பேர் இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு அணியில் ஜடேஜா, அஸ்வின், முரளிவிஜய் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.இலங்கை டெஸ்ட் தொடருக்கான அணி விவரம் :விராட் கோலி, ரஹானே, தவான், லோகேஷ் ராகுல், முரளிவிஜய், புஜாரா, ரோகித் ஷர்மா, விருதிமான் சாஹா, ஹா்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, உமேஷ் யாதவ், புவனேஸ்வர் குமார், இஷாந்த் சர்மா, ஜடேஜா, அஸ்வின், ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.