நடிகர், இயக்குநர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகம் காட்டி வந்த சிம்பு முதன்முறையாக சக்க போடு போடு ராஜா என்ற படத்திற்காக இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.
சேதுராமன் இயக்கியுள்ள இப்படத்தில் சந்தானம் ஹீரோவாக நடிக்க, விவேக், ரோபோ சங்கர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
சிம்புவின் நண்பர் விடிவி கணேஷ் தயாரித்து வருகிறார்.
இதன் ட்ரைலர் அண்மையில் வெளியானது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை வருகிற நவம்பர் 14ஆம் தேதி வெளியிடவுள்ளனர்.
இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள காதல் தேவதை என்ற முழுப்பாடலை இன்று அக்டோபர் 23ஆம் தேதி மாலை 7 மணிக்கு வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இது சிம்பு ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.