இந்த இரு சகோதரர்களையும் கண்டீர்களா?

இந்த இரு சகோதரர்களையும் கண்டீர்களா?

கனடா-ஹால்ரன் பீல் பிராந்திய சேவையினர் காணாமல் போயுள்ள ஓக்விலை சேர்ந்த இரு சகோதரர்களை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடுகின்றனர்.
ஹம்சா ஹான் 22-வயது, சறூக் ஹான் 20-வயது ஆகிய இரு சகோதரர்களும் ஓக்வில் ஒன்ராறியோவை சேர்ந்தவர்கள். மிசிசாகா நகரில் 10-வது லைன் மற்றும் தோமஸ் வீதியில் வசிப்பவர்கள். வெள்ளிக்கிழமை நவம்பர் 4-ந்திகதி இரவு 9.15 மணியில் இருந்து இவர்கள் இருவரையும் காணவில்லை.
இச்சம்பவம் இரு சகோதரர்களினதும் வழக்கத்திற்கும் மாறான செயற்பாடு என நண்பர்கள் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஹன்சா ஹான் மத்திய கிழக்கு வம்சாவளி 6.2 உயரம் 140 lbs. மெலிந்த தோற்றம் கறுப்பு முடி மற்றும் குறுந்தாடி கொண்டவர்.கறுப்பு சதுர-விளிம்பு கண்ணாடி அணிந்திருந்தார்.கறுப்பு தொப்பியுடனான குளிர் கால ஜக்கெட் மற்றும் கடும் நிற காற்சட்டை அணிந்திருந்தார்.நைக் தடகள காலணி அணிந்திருந்தார்.
சறூக் ஹான் 5.9உயரம் 165 lbs. நடுத்தர தோற்றம் கட்டை கறுப்பு முடி மற்றம் குறுந்தாடி வைத்திருந்தார். கறுப்பு அத்லெட்டிக் மேல் சட்டை மற்றும் கடும் நிற காற்சட்டை அணிந்திருந்தார்.
2011, 328i BMW ஒன்ராறியோ உரிமத் தகடு BWCJ 918 இலக்கம் கொண்ட வாகனம் வைத்திருந்தனர்.
ஹான் சகோதரர்கள் இருவரும் Sheridan College-ல் படிப்பவர்கள்.
தகவல் தெரிந்தவர்கள் ஹால்ரன் பிராந்திய பொலிஸ் பிரிவு தகவல் தொடர்பு பணியகத்துடன் 905-825-4747 ext.  5155 அல்லது 905-825-4747 ext. 210.என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

miss3miss4miss1miss

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
Easy24News

Recent News