ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் டோக்லஸ் கடற்கரைக்கு அருகில் உள்ள ஏரியில் முதலைக்காக வைக்கப்பட்ட பொறியில் 4 பேர் தைரியமாக நின்று புகைப்படம் எடுத்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஏரியில் முதலைகள் அதிக அளவில் உள்ளன. அவை அங்கு செல்லும் மனிதர்களை வேட்டையாடி வருகின்றன.
சமீபத்தில் 79 வயது மூதாட்டி ஒருவர் ஆற்றில் உள்ள முதலைக்கு இரையானார்.இந்நிலையில், அந்த ஏரியில் முதலைக்காக வைக்கப்பட்டிருந்த பொறியில் 4 பேர் தைரியமாக நின்று புகைப்படம் எடுத்துள்ளனர். மேலும் பொறிக்குள் சென்றும் அதனை சுற்றியும் நீந்தி விளையாடினர்.
அந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது. இதைக்கண்ட பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், சட்ட விரோதமாக செயல்பட்டதற்காக நான்கு பேருக்கு 11 ஆயிரம் டாலர் அபராதம் விதிக்கப்படும் என விலங்குகள் நல வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடைபெறும் என்று அவர்கள் கூறினர்.