ஆறு தலை முறைகளை சந்தித்த 96-வயது மூதாட்டி!

ஆறு தலை முறைகளை சந்தித்த 96-வயது மூதாட்டி!

கனடா-அல்பேர்ட்டாவில் விடுமுறை தினங்களில் வழக்கமாக வீடுகள் நிறைந்திருக்கும். ஆனால் அல்பேர்ட்டாவை சேர்ந்த குடும்பம் ஒன்றிற்கு இது மேலதிகமான நிறைவாகும்.
கலி எலிசபெத் கிறேஸ் மார்ஷ், மார்ஷ் குடும்பத்தின் புதிய வரவாகும்.இந்த வரவு இக்குடும்பத்தின் ஆறாவது தலைமுறையாகும்.
ஆறு தலைமுறைகளின் படங்களும் வைத்தியசாலையில் உள்ளன என கலியின் தாயாரான 20-வயது அலிசா மார்ஷ் தெரிவித்தார்.
குடும்பம் அனைத்தும் ஆர்வத்துடன் காணப்பட்டனர்.
அல்பேர்ட்டா லேத்பிரிட்ஜ் வைத்தியசாலையில் கலி அக்டோபர் 7, பிறந்தாள்.
இவளை வரவேற்க தாய் அலிசா, புதிய பாட்டி 39-வயதுடைய அமன்டா கொரமியர், 59-வயதுடைய பெரிய பாட்டி Grace Couturier,  75-வயதுடைய பெரிய பெரிய பாட்டி மற்றும் 96-வயதுடைய பெரிய பெரிய பெரிய பூட்டி வெரா சமவெல்ட் ஆகியோர் காத்திருந்தனர.
சமவெல்ட் மகள்களின் ஆறு தலைமுறைகளின் தலைவியாக தான் இருப்பதையிட்டு பெருமிதம் கொண்டார்.
சமவெல்ட் 1920ல் பிறந்தார்.சஸ்கற்சுவானை சேர்ந்த இவர் பின்னர் 2009ல் லெத்பிரிட்ஜில் குடிபுகுந்தார்.
இவரது வைத்தியரும் மற்றவர்களும் இத்தகைய நீண்ட கால வாழ்வின் ரகசியம் என்னவென ஆச்சரியமடைகின்றனர்.இவர் தினமும் இரண்டு ரம் அருந்துவார் என கூறப்படுகின்றது.
உடையாத ஏழு தலைமுறைகள் கின்னஸ் சாதனையில் இடம்பெறும் என கூறப்படுகின்றது.

 

greatgreat1great2great3great4great5great6

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News