கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று வழக்கு ஒன்று இருந்த காரணத்தினாலேயே தாம் நேற்று ஹம்பாந்தோட்டை பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பில் வாக்கு மூலம் வழங்கிவிட்டு, ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
அரசாங்கம் நாட்டின் சொத்துக்களை விற்பனை செய்கின்றது. அதற்கு எதிராகவே நாம் வீதிக்கு இறங்கியுள்ளோம்.
எம்மை சிறையில் அடைத்தால் அடைக்கட்டும். அதற்காக எமது நடவடிக்கைகளை நிறுத்திவிட முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஏ.எஸ்.பி அழுவத்தை, அர்ஜுன் மகேந்திரன், அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அலோசியஸிடம் பணம் வாங்கிய பிரதமர் போன்றோரே சிறையில் இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் வெளியே நாங்கள் உள்ளே என குறிப்பிட்டுள்ளார் நாமல்.