காலா படப்பிடிப்பிற்கு செல்வதற்கு முன்பு, போருக்கு தயாராகுங்கள் என்று ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டார் ரஜினி. அதில் இருந்து அரசியல் வட்டாரங்களில் தலைப்பு செய்தியாகி விட்டார் அவர். அதோடு, ரஜினியின் இந்த அறிவிப்புக்குப்பிறகு கமலும் அரசியலுக்கு வருவதற்கான சூழல்கள் ஏற்பட்டிருக்கிறது. இதனால், எதிர்கால அரசியலில் ரஜினி, கமல் ஆகிய இருவரும் போட்டியாளர்களாகி விடுவார் என்று தெரிகிறது.
இதனிடையே எப்போதும் தான் ஒரு முக்கிய முடிவெடுப்பதற்கு முன்பு இமயமலை சென்று பாபாவை வழிபடுவது ரஜினியின் வழக்கம். அந்த வகையில், காலா படப்பிடிப்பு முடிந்ததும் இமயமலைக்கு செல்கிறாராம் ரஜினி. அதன்பிறகு தான் அரசியல் பிரவேசம் குறித்து முக்கிய தகவலை வெளியிடுகிறாராம் ரஜினி.