அரசியல் இலாபங்களுக்காக வடக்கில் எத்தகைய ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டாலும் பாரதூரமான குற்றச் செயல்களுடன் தொடர்புள்ள எல்.டீ.டீ.ஈ சந்தேகநபர்கள் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன தெரிவித்தார்.
பியகம பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களுக்கு இலவச கற்றல் உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் நேற்று கலந்துகொண்டபோது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சில உறுப்பினர்கள் வடக்கில் ஹர்த்தாலை முன்னெடுத்து, அப்பிரதேசங்களிலுள்ள மக்களின் இயல்பு வாழ்க்கையில் இடையூறுகளை விளைவிக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அரசியல் இலாபங்களுக்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர்கள் சிறையிலுள்ள இவர்களை அரசியல் கைதிகள் என குறிப்பிட்டாலும் அவர்கள் அவ்வாறானவர்கள் இல்லையெனவும் அவர் தெரிவித்தார்.