யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி அவசர நோயாளியொன்றை ஏற்றிச் சென்ற அம்பியுலன்ஸ் வண்டியின் ஊழியர்கள் பாதையின் நடுவில் வாகனத்தை நிறுத்தி ஐஸ்கிரீம் சாப்பிட்டு சந்தோஷம் கொண்டாடியமை தொடர்பில் விசாரணை நடாத்துமாறு வடக்கிலுள்ள நோயாளர்களைப் பாதுகாக்கும் அமைப்பொன்று வேண்டுகோள் விடுத்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (13) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதுதொடர்பில் விசாரணை நடாத்துமாறு வட மாகாண சுகாதார அமைச்சிடம் அவ்வமைப்பு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.