அமெரிக்க அதிபர், டிரம்ப், மனித குலத்தை அழித்துவிடுவார்,” என, கியூபா புரட்சியாளர், சே குவாரா மகள், அலெய்டா குவாரா மார்ச், தெரிவித்துள்ளார்.
கரீபியன் தீவு நாடான, கியூபாவில் புரட்சியாளர், சே குவாராவின் மூத்த மகள், அலெய்டா குவாரா மார்ச், 57; தலைநகர், ஹவானாவில் வசித்து வருகிறார். அவர், அளித்த பேட்டியில் கூறியதாவது:
மிகப்பெரும் கம்யூனிஸ்ட் தலைவராக இருந்த என் தந்தை, அன்பானவர், ஒழுக்கமானவர் என, பெயர் பெற்றவர். ஆனால், அமெரிக்க அதிபர், டிரம்பிடம், அதிகாரங்கள் குவிந்துள்ளன; மனசாட்சி துளியும் இல்லை.பைத்தியக்காரத் தன்மை அதிகம் உடைய அவரிடம், அதிகாரம் கிடைத்ததால், பிரச்னைகள் அதிகரித்துள்ளன. அவரது நடத்தை, மனித குலத்தை அழித்து விடும்; அதை தடுப்பதற்கு, நாம் இப்போதே தயாராக வேண்டும்.
1997ல், இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்தது மறக்க முடியாது. இந்தியர்கள், நட்புணர்வு மிக்கவர்கள். இவ்வாறு, அலெய்டா கூறினார்.