அமெரிக்காவின் மொத்தமுள்ள ஐம்பது மாகாணங்களில் இருபத்தி ஐந்தில் திருமணத்துக்கான குறைந்தபட்ச வயது எது என்ற சட்டங்களே இல்லை.
அதன் விளைவாக ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சிறுமிகளுக்கு திருமணங்கள் நடப்பதாகவும் அவர்களில் சிலர் பதின்பருவம் கூட எட்டாதவர்கள் என்றும் பெரும்பாலும் வயதான ஆண்களுக்கு இவர்கள் கட்டிவைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.