ஆஸ்திரேலியாவில் ரூபாய் ஒரு லட்சம் கோடி முதலீட்டில் அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம் செயல்படுத்தவுள்ள நிலக்கரி சுரங்க திட்டத்திற்கு பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது. இதற்காக பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கானோர் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில், கார்மைக்கேல் நிலக்கரி சுரங்க திட்டத்தை செயல்படுத்தும் ஒப்பந்தத்தை இந்தியாவை சேர்ந்த அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
ஆனால் இந்த திட்டத்தால் சுற்றுச்சூழல் மோசமாக பாதிக்கப்படும் எனக் கூறி பல்வேறு பகுதிகளில், அந்நாட்டு மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். நம் வருங்காலத்தை பாதுகாப்போம். என்ற வாசகம் எழுதப்பட்ட அட்டைகளை ஏந்தியபடி அதானி நிறுவனத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.