நல்லாட்சி அரசாங்கம் அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாகவும், கடந்த அரசாங்கமோ அண்மையிலுள்ள சிறைச்சாலை சிறந்த சிறைச்சாலை என்ற கொள்கையை நடைமுறைப்படுத்தியது எனவும் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இன்று 65 ஆவது வீடமைப்புத் திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.
இலங்கையிலேயே உள்ள சொகுசு சிறைச்சாலையை கடந்த அரசாங்கம் ஹம்பாந்தோட்டையில் அமைத்தது. இதனை ஸ்ரீமத் ராஜபக்ஷ சிறைச்சாலை என நாம் பெயரிட்டுள்ளோம். இன்று ஹம்பாந்தோட்டையில் ஒழுங்கான வகுப்பறையின்றி பல பாடசாலைகள் உள்ளன.
இவற்றையெல்லாம் வைத்துக் கொண்டு தான் கடந்த அரசாங்கம் சிறைச்சாலையை திறந்தது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.