அஜித் ஹீரோயின் பூஜாவுக்கு கல்யாணமாம்! மாப்ள யாரு தெரியுமா
நடிகை பூஜா நடிகர் அஜித்துடன் அட்டகாசம் படத்தில் நடித்தவர். ஜே ஜே படம் மூலம் தமிழுக்கு வந்த இவர் இலங்கையை பூர்வீகமாக கொண்டவர்.
தமிழில் அதிகமான படங்களில் நடித்த பூஜா தெலுங்கு, கன்னடம், மலையாளம், சிங்களம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். மாதவன், ஜீவா, ஆர்யா, ஷாம் ஆகியோருடன் பூஜா நடித்துள்ளார்.
இந்நிலையில் அவர் இன்று இலங்கையை சேர்ந்த தொழிலதிபர் தீபக் சண்முகநாதனை கொழும்பு, கல்கிசை பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டார்.