அக்டோபரில் கனடாவில் 44,000மேலதிக வேலை வாய்ப்புக்கள்!

அக்டோபரில் கனடாவில் 44,000மேலதிக வேலை வாய்ப்புக்கள்!

ஒட்டாவா-அக்டோபர் மாதத்தில் கனடிய பொருளாதாரம் 44,000மேலதிக வேலை வாய்ப்புக்களை பெற்றுள்ளது. இருப்பினும் முற்றிலும் பகுதி-நேர வேலை வாய்ப்புக்களென கனடா புள்ளிவிபரவியல் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
மேலதிக பகுதி-நேர அதிகரிப்பினால் ஒட்டு மொத்த அதிகரிப்பு உந்துதல் அடைந்து 67,000 ஆக உயர்ந்துள்ளது. இதே நேரம் முழு-நேர வேலை வாய்ப்பு 23,000ஆல் வீழ்ச்சியடைந்துள்ளது.
பெரும்பாலான மக்கள் தொழிலாளர் சந்தையில் நுழைந்ததால் வேலையின்மை ஒரே நிலையில்  7.0 சதவிகிதமாகவே நிலை பெற்றுள்ளது.
ஒரு வருடத்தின் முன்னய நிலைமையுடன் ஒப்பிடும் பொழுது அக்டோபர் மாதத்தில் 140,000 மேலதிக வேலைவாய்ப்புக்கள்-16,000 முழு நேர வாய்ப்புக்கள் அதிகரிப்பு மற்றும் 124,000 பகுதி-நேர வேலை வாய்ப்புக்கள் உட்பட்ட- ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.
அக்டோபரில் பொருட்கள் உற்பத்தி துறையில் கிட்டத்தட்ட 21,000 வேலை வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன. கட்டுமான துறையில் 24,000அதிகரிப்புக்கள் ஏற்பட்டுள்ளது. இயற்கை வளங்கள் துறையில் 10,000 அதிகரிப்புக்கள்-2015-மார்ச் மாதத்தின் பின்னர் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க அதிகரிப்பு- காணப்படுகின்றது.
சேவைகள்-உற்பத்தி துறையில் 23,000 வேலைகள், மொத்த மற்றும் சில்லறை வர்த்தகத் துறையில் 19,000 மற்றும் மற்றய-சேவைகள் வகையில் 18,000அதிகரிப்பும் ஏற்பட்டுள்ளன.
கல்வி சேவையில் 16,000 அதிகரிப்பு காணப்பட்டுள்ளது.
மாகாண ரீதியாக ஒன்ராறியோவில் 25,000 அதிகரிப்பும் பிரிட்டிஷ் கொலம்பியாவில் 15,000 காணப்படுகின்றது.நியு பவுன்லாந் மற்றும் லப்ரடோரின் எண்ணிக்கை 5,600 ஆல் வீழ்ச்சியடைந்துள்ளது.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
Easy24News

Recent News