அகதிகளைக் குடியமர்த்த வரிசெலுத்துவோரின் பணத்தில் 385 மில்லியன் டொலர்கள் செலவு

அகதிகளைக் குடியமர்த்த வரிசெலுத்துவோரின் பணத்தில் 385 மில்லியன் டொலர்கள் செலவு

கனடாவில் உள்வாங்கப்பட்ட 25,000 சிரிய அகதிகளைக் குடியமர்த்த கனேடிய அரசு, வரிசெலுத்துவோரின் பணத்தில் 385 மில்லியன் டொலர்களைச், செலவு செய்துள்ளதாக அரச புள்ளிவிபரம் ஒன்று தெரிவிக்கிறது.

மத்திய அரசு சிரிய அகதிகளைக் குடியமர்த்துதலுக்கான செலவினமாகக் கணித்திருந்த தொகையை விட இது 70.3 மில்லியன் டொலர்கள் குறைவானதாகும் என மேற்குறித்த அரச புள்ளிவிபரம் சுட்டிக்காட்டியுள்ளது.

குறைவான பிரயாணச்செலவுகள், அவசர தேவைக்கான நிதி பயன்படுத்தப்படாமை போன்றனவே இதற்கான காரணமாகக் கூறப்படுகின்றது.

அரச புள்ளிவிபரங்களின்படி நவம்பர் 12, 2016 வரைக்கும் கனடா வந்தடைந்த சிரிய அகதிகளின் எண்ணிக்கை 34,696 ஆகும். இவர்களுள் 18,156 பேர் அரச ஆதரவின் கீழ் அழைத்து வரப்பட்டவர்கள். இவர்களுக்கான செலவு குடியமர்வுச்செலவுகள் முழுமையாக அரசினாலேயே பொறுப்பேற்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
Easy24News

Recent News